5/15/2008

புத்தக சல்லாபங்கள்

அம்பிக்கு செக்ஸைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம். உடனே, ஒரு புத்தக கடைக்குச் செல்கிறான். (இன்று பலருக்கு இந்த வியாதி தான் இருக்கிறது. அதனால் தான் புத்தக திருவிழாவில் கூட இதுபோன்ற புத்தகங்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன.) அங்கு சென்றால், "ஒண்ணுக்கு அடிப்பது எப்படி?” என்ற தலைப்பில் தொடங்கி "பேன் பார்ப்பதில் புகுத்தப்பட்ட புதுமை", "காலையில் கக்கூஸ் அடைத்துவிட்டால் என்ன செய்வது?" என்ற வகையறாக்களில் பல தலைப்புகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தன் பார்வையை அகல விரித்து தனக்கு வேண்டிய புத்தகத்தைத் தேடுகிறான். பின் அது கிடைத்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வருகிறான்.

வாசிக்க உட்காருகிறான். வாசிக்கிறான்... வாசிக்கிறான்... பின் திடீரென வாசிப்பதை நிறுத்துகிறான். ஏனென்று பார்த்தால், தனது அறிமுக உரையில் புத்தகத்தின் ஆசிரியர் ஒரு கருத்தை வைக்கிறார். ஒரு பெண்ணையும் வைத்து கொண்டு இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றை செய்து பார்த்தால் முழு பயனை அடையலாம் என்பதே அவர் சொல்கிறார்.

இப்போது அம்பிக்கு ஒரு பெண் வேண்டும். ஆர்வத்தை அடக்கி கொள்ள அவன் ஹார்மோன்னுக்கு முடியவில்லை. அப்படி இப்படி என்று ஒரு மாமாவை ரெடி பண்ணி அன்று இரவே ஒரு அழகியை ரெடி பண்ணிவிடுகிறான். வந்த அழகியை உட்கார வைத்துவிட்டு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படிக்கிறான். இரண்டாவது அத்தியாயம் என படித்து கொண்டே இருக்கான். பின் அட்டையை பார்க்கிறான். பின்னட்டையைப் பார்க்கிறான்.

வந்த அழகிக்குப் பொறுமை தாங்காமல், "யோவ் நீ என்ன லுசா... வந்ததுல்ல இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு படிச்சீட்டே இருக்க, வந்து மேட்டரை முடிச்சுட்டு அனுப்புய்யா... " என்று சொல்ல.

உடனே அம்பி "கொஞ்சம் பொறுத்துக்கிறேளா... எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்கிறது. ப்ளீஸ்...."

யோவ் நீ இதுக்கு புதுசா...

ஆமா அதான் புத்தகத்தை வாங்கிண்டு வந்தேன்... ஏன் கேக்கிறேள்...

அத மொதல்லே சொல்லி தொலைக்க வேண்டியதான... சரி சரி இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல... நானே சொல்லி தாரேன்.

அத நீங்க எப்படி சொல்லி தருவேள்? எனக்கே ஆரம்பம் புரிய மாட்டேங்குது.

ஆமா நீ என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?

"இந்த சமாச்சாரத்த பத்தி தெரிஞ்சிக்கத்தான். இந்தப் புத்தகத்துல ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்குன்னு சொன்னாள் அதான் உன்ன கூட்டின்டு வந்தேன்" என்கிறான் அப்பாவியாக

"சரி நீ படிக்க வந்தீயா? இல்ல படுக்க வந்தீயா?" என வந்தவள் கேட்க.

"என்ன நீங்க இப்படியெல்லாம் பேசுறேள்? அபச்சாரம்.."

"யோவ் சீக்கிரம் வாய்யா உங்கிட்டலாம் ரொம்ப பேசிக்கிட்டு இருக்க முடியாது" என்று நம்மாளை இழுக்க.

"கொஞ்சம் பொறுங்கோ.. எல்லாத்தையும் பத்தி இந்தப் புத்தகத்துல எழுதியிருக்காள். ஆனா இந்தப் புத்தகத்த படிச்சுண்டே எப்படி செக்ஸ் வைக்கணும்னு அவா சொல்லல.... அதான் நானே கொழம்பி போயி இருக்கேன்" என்றானே அந்த படிப்பாளி பாப்பான்.

"போடாங்கோ.. போயும் போயும் ஒங்கிட்ட போயி வந்தேன் பாரு" என்று தன் தலையில் அடித்து கொண்டு வாயில் வந்த பல பொன்மொழிகளை உதிர்த்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் போகிறாள் அழகி.

இதுபோல தான் புத்தகங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் புத்தகத்தைப் படித்து தான் விஷயங்களை அறிந்து கொள்வோம் என்று சிலர் அடம்பிடிக்கிறார்கள். அதனால் தான் நம் மீது புத்தகங்களை வைத்தே பல மதச் சம்பந்தமான விஷயங்கள் திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால் பைபிளையும், இஸ்லாத் குரானையும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டு, இதுதான் நமக்கு வாழ்க்கை, இதுதான் நமக்கு உணவு, அதை ஒரு நாளைக்கு காலையிலும், மாலையிலும் தவறாமல் படிக்க வேண்டும் என்று சொல்லி பாவி மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதில் பெரிய கொடுமை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதன் மூலம் தங்கள் அதிகாரத்தை திணிப்பது இருக்கிறதே, மகா கொடுமை. தங்கள் பிள்ளைகளிடம் "நீங்கள் பைபிளில் சொன்ன படி தான் நடந்து கொள்ள வேண்டும். இவை கடவுளுடைய வார்த்தைகள், இதனை படித்து அவற்றுக்கு கீழ்படிய வேண்டும்" என்ற அறிவுரைகள் வேறு. ஞாயிற்று கிழமை ஆகிவிட்டால் ஆடு மாடுகளை மந்தைக்கு மேய்ப்பது போல சர்ச்சுக்கு அனுப்பி போதனை, போதனை, போதனை என போதனை போதையை ஏற்றி கொண்டே இருப்பார்கள்.

சரி, இப்போது இந்தப் புத்தக விஷயத்திற்கு வரலாம். இவ்வாறு தான் கிறிஸ்தவத்தில் ஊறி போன ஒரு குடும்பம். அவர்களுக்கு மற்ற மக்களை (இந்து, முஸ்லீம் என தங்கள் பெயரில் சாயம் பூசப்பட்டவர்கள்) பார்த்தாலே மிகவும் அருவெருப்பாக இருக்கும். ஏனெனில், இவர்கள்தான் கடவுளிடம் சென்று தங்கள் பாவ சாபங்களை தீர்த்து விட்டு வந்தவர்கள் மற்றவர்களை எல்லாம் தங்கள் கடவுள் மன்னிக்க மாட்டாரே. அந்த குடும்பத்தில் அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் அவர்கள் தங்கள் பைபிள் போதனை, சர்ச் என்ற வாசனையோடே வளர்த்தார்கள். ஞாயிற்று கிழமையானால் இவர்கள் குடும்பத்தோடு பைபிளை தூக்கிக்கொண்டுதான் திரிவார்கள். அதில் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. இருந்தாலும் சர்ச் முடிந்தவுடன் நண்பர்கள் வீட்டுக்கு சென்று அவர்களிடம் அந்த வார கதைகளை பேசி விட்டு சிக்கன் கடைக்கு செல்வது அவர்களின் வழக்கமாக இருக்கும். பின் இரவு சர்ச்சில் வழிபாட்டுக்கு வருவது என தங்கள் வழக்கத்தை மாற்றாமல் வைத்திருந்தார்கள்.

அவ்வாறு ஒரு நாள் இரவு சர்ச்சில் எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது அந்த வீட்டிலுள்ள மூத்த பையனின் செல்போன் சிணுங்குகிறது. அவனுக்கு 18 வயது இருக்கும். மறு முனையில் அவனது நண்பன் "மச்சான் எங்க வீட்டுக்கு வாடா தனியா தான் இருக்கேன்" என்கிறான். மேலும் "நைட் இங்கேயே தங்கலாம். வீட்ல சொல்லிட்டு சீக்கரம் வா.." என்கிறான். இவனும் அவர்கள் வீட்டில் சொல்லிவிட்டு வந்து சேருகிறான்.

அங்கு மேலும் இரண்டு நண்பர்கள், சரக்கு, ஒரு பொண்ணு என்று சகலவிதமான சந்தோஷங்களில் சல்லாபித்து கொண்டிருக்கிறார்கள். வந்தவனுக்கு இதெல்லாம் புதிது. அதனால் வெளியே மற்ற நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கிறான். பின் அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று தான் கொண்டு வந்த பைபிளை திறந்து படிக்கிறான். ஆனால் தொடர முடியவில்லை. கீழே வருகிறான். நண்பர்களின் பல கிண்டலுக்கிடையே அவனை அந்த பெண் உள்ள அறைக்குள் தள்ளுகிறார்கள். அவனுக்குள்ளும் அந்த ஆர்வம் வர... ஆடை முழுவதும் அவிழ்க்கப்பட்டிருந்த அந்த அழகியை நெருங்குகிறான். அவள் தனங்களின் மீது கையை வைத்து விடுகிறான். பின் விருட்டென வெளியே வருகிறான். அவ்வளவு தான். கட்....

பின் மொட்ட மாடியில் மண்டியிட்டு தன் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறான். பைபிளை எடுத்து படிக்கிறான். பாவம் செய்த மனம் பதபதைக்கிறது போல. தன் ஜெபத்தை முடித்த பின் பழைய நிலைக்கு வருகிறான். பின் இன்னொரு வாரம்... இன்னொரு வாரம்...

1. எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் கடவுளிடம் மண்டியிட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்.
2. நாம் அம்மா, அப்பாவிடம் சொல்ல முடியாத பிரச்சனைகளை கடவுளிடம் சொல்லலாம்.
3. உங்கள் பாவத்தை கடவுளிடம் அறிக்கையிட்டால், உங்கள் மனம் இறகு போல லேசாகிவிடும்.

பைபிளை திருப்பும் போதொல்லாம் இந்த வார்த்தைகளே அவனுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளாக இருக்கின்றன.

1 comment:

இரா. வசந்த குமார். said...

அன்பு பொழிலினி...

தங்கள் வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றிகள்.

நான் ஓர் அரைவேக்காடு என்று கண்டறிந்ததற்கு மிக்க நன்றி. என்னை நான் இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்கள் அக்கறையை 'முதலில் படி. பின் எழுது' என்ற வரிகளில் காண்கிறேன். அதற்கும் ஒரு நன்றி.

ஏதோ பிறந்ததில் இருந்தே நான் மலையள மினரல் வாட்டர் குடித்து வளர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கின்றது. தமிழகத்தில், 25 ஆண்டு காலம் கழித்த பின்பே இப்போது மலை நாட்டில் உள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் பஞ்சமே வந்ததே இல்லை ,தண்ணீர் தண்ணீராகப் பாய்ந்தது என்று நீங்கள் கூறுவீராயின், ஒப்புக் கொள்கிறேன், நான் மலையாள மினரல் வாட்டர் குடிக்கிறேன் என்று!

எனது பதிவில் (http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_2138.html) நான் எந்த வகையில் 'தேச ஒற்றுமை' இல்லை என்பதைப் பற்றியோ, 'தேச ஒற்றுமை' உண்டு என்பதைப் பற்றியோ பேசுகிறேன் என்று தெரியவில்லை.

காந்தியை 'தேசத் துரோகி' என்று ஏன் கூறுகிறீர்கள், அவர் இருக்கும் போது 'தேசம்' என்ற ஓர் அமைப்பே இல்லையே, அவர் தானே 'ஒரே தேசம்' என்ற கருத்தைக் கொண்டு வந்தவர்களில் ஒருவர் என்று கூறியுள்ளேன்.

தனி மனித உணர்வைத் தூண்டி விட்டு தாங்கள் அதில் குளிர் காயலாம் என்று நினைப்பின் அதற்குத் தகுந்த தளம் இதுவல்ல (http://kaalapayani.blogspot.com/)என்றும், அதற்குத் தக்க ஆள் நான் அல்ல என்பதும் கூறிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இருக்கும் தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவைத் தாங்கள் கண்ணுற்றதில்லை என்று நினைக்கிறேன். தயவித்து அதையும் பார்த்து, உங்களது கருத்தை உரைத்து விட்டுப் போனால், நலம்.

http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_04.html

http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_6601.html

மிக்க நன்றி.